பள்ளிகள் இணைப்பால், நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆபத்து வருமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 14, 2019

பள்ளிகள் இணைப்பால், நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு ஆபத்து வருமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
அரசுப்பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும், அருகில் உள்ள உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்படப் போகின்றன என்று வந்து கொண்டுள்ள தகவல்கள் அனைவரும் அறிந்ததே. இது அரசுப்பள்ளிகளுக்குத் தானே, அதனால் நமக்கென்ன என நிதி உதவி பெறும் பள்ளிகள் இருந்தால் அவற்றால் விளையும் பாதிப்புகளையும் சந்திக்க வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடும். முதலில் வளாகத்திற்குள் உள்ள பள்ளிகள் இணைப்பு என்ற நிலையில் தொடங்கி... பின்னர் குறிப்பிட்ட தூரத்திற்குட்பட்ட பள்ளிகள் இணைக்கப்படும் போது, இணைக்கப்படும் பள்ளிகளின் நிர்வாகம் உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் செல்லும்.
உதாரணத்திற்கு இணைக்கப்படும் பள்ளிகளின் மாற்றுச்சான்றுகள் வழங்கும் அதிகாரமும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியரின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும். இந்நிலைகளினால், தற்போது அரசு தொடக்கப்பள்ளிகளில் 5 ஆம் வகுப்பை முடித்து, நிதியுதவி பெறும் நடுநிலை / உயர் நிலை / மேல்நி லைப் பள்ளிகளில் சேர வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும். சம்பந்தப்பட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் அவர்களின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் 5 ஆம் வகுப்பை நிறைவு செய்பவர்களை அவர்களது பள்ளிகளிலேயே (அதாவது அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகளிலேயே) தொடர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்படும். இந்த நிலை வரும் போது, நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தடைபடும். மாணவர்களின் எண்ணிக்கை குறையும். நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாகும் நிலை ஏற்படும். இவ்வாறு நிகழ உள்ள நிலைகளை கூர்ந்து கவனித்து, ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றி உணர வேண்டும்.
எனவே இன்றைய ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு அனுப்புவதில் தொடங்கி உள்ள நிலைப்பாடுகளில் இது அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கானது என, நிதி உதவி பெறும் பள்ளிகள் அமைதி காத்து இருந்தால், இனிவரும் எல்லா மாற்றங்களினாலும் ஏற்படப்போகும் நிலைகளை நிதியுதவி பெறும் பள்ளிகள் சந்திக்க வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கலாம்.
அங்கன்வாடிகளுக்கு முன்பருவக் கல்வி பயிற்சி பெற்றவர்களை அரசு நியமிக்கலாம். ஆனால் மாறாக இன்று நிரவல் என்ற பெயரில் தொடங்கி, தற்போது ஈராசிரியர் பள்ளிகளில் இருப்போரையும் அழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ( அங்கன்வாடி LKG UKG க்கு நிதியுதவி பெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்களையும் அனுப்ப ஆணைகள் ஒரு சில இடங்களில் வந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது)
அனைவரும் ஒற்றுமையாக வேண்டியது, தற்போதைய சூழல்களில் அவசியமாகிறது. ஜாக்டோ ஜியோ எடுக்கும் முடிவுகளில் நாம் ஒவ்வொருவரும் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளத் தயாராவோம். நம்மைச் சுற்றி நம் ஆசிரியர் சமூகத்தினருக்கு நிகழும், நிகழப் போகும் நிலை குறித்து அறிந்து கொண்டு விழிப்படைவோம், விழிப்படையச் செய்வோம். -லாரன்ஸ், திருச்சி
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews