அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம் நவம்பர் 30ம் தேதி அமல்: பதிவுத்துறை அதிகாரி தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, November 12, 2018

அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம் நவம்பர் 30ம் தேதி அமல்: பதிவுத்துறை அதிகாரி தகவல்

பொதுமக்களும் பதிவை பார்க்கும் வகையில், இரட்டை திரை சிஸ்டம் நடைமுறை அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் நவம்பர் 30ல் செயல்பாட்டுக்கு வருகிறது. மேலும், டோக்கன் சிஸ்டம் நடைமுறையும் டிசம்பர் 31க்குள் முழுவதுமாக அமல்படுத்தப்படும் என்று பதிவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம் பதிவு செய்யப்படுகிறது. இந்த பதிவின்போது, சில நேரங்களில் விரல் ரேகை பதியவில்லை, புகைப்படம் சரியாக விழவில்லை என்று சிறு காரணங்களை கூறி பத்திரம் பதியாமல் திருப்பி அனுப்பும் நிலை உள்ளது.
மேலும், சார்பதிவாளர்கள் விரல் ரேகை பதிவை கேட்கும் போது பொதுமக்களுக்கும் பல நேரங்களில் சந்தேகங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும் பத்திரப்பதிவில் வெளிப்படை தன்மை இருக்கும் வகையில், பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும், ஆவண பதிவை தெரி ந்து கொள்ளும் வகையில் இரட்டை திரை சிஸ்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி பத்திரம் பதிய வரும் பொதுமக்களும் எவ்வாறு பதிவு செய்யப்படுகிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். முதற்கட்டமாக சென்னையில் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த இரட்டை திரை சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த சிஸ்டம் நவம்பர் 30ம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று பதிவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும், கூறுகையில், வங்கிகளை போல் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன் சிஸ்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் மக்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் வகையில் முன்பதிவு ெசய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 51 அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொடர்ந்து மற்ற அலுவலகங்களில் இத்திட்டம் விரிவுப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த டோக்கன் சிஸ்டம் டிசம்பர் 31ம் தேதிக்குள் அனைத்து அலுவலகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews