விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أكتوبر 02، 2018

விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறப்பு


காலாண்டுத் தேர்வு விடுமுறை நிறைவு பெற்று, நாளை (3ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன.பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு, ஆறு முதல் ஒன்பது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புக்கு கடந்த மாதம், 10ம் தேதி முதல், 23 வரை காலாண்டுத் தேர்வு நடந்தது. 24 முதல் இன்று வரை ஒன்பது நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.இன்றுடன் விடுமுறை நிறைவடைந்து, நாளை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வழங்க ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 244 பாடப்புத்தகம், நோட்டுகள் தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் இருந்து தருவிக்கப்பட்டுள்ளது.தென்னம்பாளையம், இடுவம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் இருந்த இந்த புத்தகங்கள் இரண்டு நாட்களாக, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இவை நாளை பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

إجمالي مرات مشاهدة الصفحة