ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் மொட்டையடித்துக் கொண்டு காந்தி வேடமிட்டு அசத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 03, 2018

Comments:0

ஒரே நேரத்தில் ஆயிரம் மாணவர்கள் மொட்டையடித்துக் கொண்டு காந்தி வேடமிட்டு அசத்தல்




சென்னை கொளத்தூர் பகுதியில் இயங்கி வருகிறது எவர்வின் பள்ளி குழுமம். மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியின் சார்பில் ஆயிரம் மாணவர்கள் மொட்டையடித்துக் கொண்டு காந்தி வேடமிட்டு அசத்தினர்.
பொதுவாக இதுபோன்ற விழாக்களில் ஒன்றிரண்டு மாணவர்களை தலைவர்கள் போல் வேடமிட்டு அந்த விழாவை கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்த பள்ளி எடுத்திருந்த புதிய முயற்சியை கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மொட்டையடித்து காந்தியைப்போல் வேடமிட்ட ஆயிரம் மாணவர்களும் பள்ளி மைதானத்தில் 15 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமர்ந்து பிறையாசனம், பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற யோகாசனங்களை செய்தனர். .
ஊழலில்லா சமுதாயம், ஜாதிமத பேதமற்ற தேசம், கட்டணமில்லா கல்வி மற்றும் சுகாதாரம், பெண்கள் உரிமை, பாதுகாப்பு, வன்முறையற்ற சமுதாயம் போன்றவற்றை மையப்படுத்தி இந்த யோகாசனங்களை மாணவர்கள் செய்துகாட்டினர். .
மேலும் ஆயிரம் மாணவர்களும் கொளத்தூர் பிரதான சாலையில் 1.5 கி.மீ தூரத்திற்கு ஊர்வலமாக சென்று மக்களிடையே காந்தியின் கொள்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். .
இது தவிர உயர் வகுப்பை சேர்ந்த 150 மாணவிகள் காந்தியின் உருவத்தை தங்கள் முகத்திலும், கைகளிலும் ஓவியம் வரைந்துகொண்டு "காந்தியின் கொள்கைகள் நம் நெறியாகட்டும்", "பெண்களின் உரிமை பாதுகாப்பு காந்தி கண்ட கனவு", "ஊழலில்லா அரசு என்று கொட்டு முரசு", "சொல்லாலோ, செயலாலோ வன்முறை இங்கு வேண்டாம்" போன்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். .
இது தவிர 10 மாணவர்கள் தங்கள் உடல் முழுவதும் வண்ணம் பூசி அசல் காந்தி போல சிலையாக நின்றனர். .
விழாவில் எவர்வின் பள்ளிக் குழுமத்தின் தலைமைக் கல்வி அதிகாரி மகேஸ்வரி, மூத்த முதல்வர் புருஷோத்தமன், மூத்த நிர்வாகி கலையரசி மற்றும் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். .

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews