"5,000 அரசுப் பள்ளிகளை மூடுவதா?" - கொட்டும் மழையில் முழங்கிய புதுக்கோட்டை அரசு ஊழியர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 04, 2018

"5,000 அரசுப் பள்ளிகளை மூடுவதா?" - கொட்டும் மழையில் முழங்கிய புதுக்கோட்டை அரசு ஊழியர்கள்


புதுக்கோட்டையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம்... புதுக்கோட்டை,அக்.4 : அரசு நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் வியாழக்கிழமை புதுக்கோட்டை பொதுத்துறை அலுவலக வளாகம் முன்பு ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு இரா.ரெங்கசாமி,மு.ராஜாங்கம், க.சு.செல்வராசு ஆகியோர் தலைமை வகித்தனர். போராட்டத்தினை தொடங்கி வைத்து தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணைச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேசியதாவது: 1.4.2003 க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்திட வேண்டும். இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி,அமைச்சுப் பணியாளர்கள்,கண்காளிப்பாளர்கள் ,தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலக பல்வேறு துறைகளிலுள்ள தொழில் நுட்ப ஊழியர்கள்,ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

சிறப்பு கால முறை ஊதியம் சத்துணவு,அங்கன்வாடி,வருவாய் கிராம உதவியாளர்கள் ,ஊராட்சி செயலாளர்கள்,ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியமும்,கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியமும் வழங்கப் பட வேண்டும்.21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் வழங்கிட வேண்டும்.5000 அரசுப் பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட்டு சமூக நீதியினைப் பாதுகாத்திட வேண்டும்.இளைஞர்களின் வேலைவாய்ப்பினை பறிக்க கூடிய வகையில் வெளியிட்ட பணியாளர்கள் பகுப்பாய்வுக் குழுவினை ரத்து செய்திட வேண்டும்..எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடும்,நவம்பர் 27 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என்றார்.. போராட்டத்தில் அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் குமரேசன்,தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் கணேசன்,முதுகலை ஆசிரியர் சங்கம மணிமேகலை,கல்லூரி பேராசிரியர் சங்கம் நாகேஸ்வரன்,அங்கன்வாடி ஊழியர் சங்கம் இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்கம் மலர்விழி ,ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் மகேந்திரன்,கணேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.. கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

Total Pageviews