அரசு பள்ளிகளில், கற்றல் அடைவு குறித்து, அக்., 3 முதல் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது
அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஆண்டுதோறும் மாணவர்களின் கற்றல் அடைவு திறன் கணக்கீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் சிறப்பு பயிற்சி, கட்டகங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.நடப்பாண்டு, காலாண்டு விடுமுறை முடிந்து, அக்., 3ல், பள்ளிகள் திறக்கப்படுகின்றன
அன்று முதல், நவ., 30க்குள், அனைத்து பள்ளிகளில், கற்றல் அடைவு குறித்த ஆய்வை நடத்தி முடித்து, அறிக்கை அனுப்ப, அனைவருக்கும் கல்வி வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
ஆய்வில், தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களில், வாசித்தல், எழுதுதல், எளிய, திறன் சார்ந்த கணக்குகளை செய்தல் ஆகிய திறன்களில், மாணவர்களின் நிலை குறித்து ஆய்வு நடத்தப்படும்