கடலூரில் முன்னாள் பள்ளி மாணவர்கள் 5 ஆயிரம் பேர் ஒன்று கூடி ஐந்து உலக சாதனைகளை படைத்துள்ளனர்.
மஞ்சக்குப்பதில் உள்ள அரசு உதவி பெரும் தூய வள்ளலார் பள்ளியில் 150 வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் முன்னாள் பள்ளி மாணவர்கள் 5152 பேர் ஒன்று கூடினர். இது ஒரு உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல் 3 ஆயிரம் பேர் செல்போனில் உள்ள பிளாஷ் லைட்டை ஒரே நேரத்தில் ஒளிர செய்ததும் உலக சாதனையாகும். அனைவரும் ஒரே நேரத்தில் கைகுலுக்கினர் மேலும் பள்ளி விடுதியில் தங்கியிருந்த முன்னாள் மாணவர்கள் 759 பங்கேற்றது உள்ளிட்ட சாதனைகள் படைக்கப்பட்டது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்கள் சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்
ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.