அனைத்து பாடங்களில் 100 மதிப்பெண் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، مايو 08، 2023

2 Comments

அனைத்து பாடங்களில் 100 மதிப்பெண் எடுத்து திண்டுக்கல் மாணவி சாதனை!



அனைத்து பாடங்களில் 100 மதிப்பெண் எடுத்து சாதனை*

திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்ற 12ம் வகுப்பு மாணவி அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அண்ணாமலையார் அரசு உதவி பெரும் பள்ளியை சேர்ந்த இவர் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளார்.

'பெற்றோர்களும், ஆசிரியர்களும் என்னை ஊக்கப்படுத்தினர். என் மீது எந்த திணிப்பையும் ஏற்படுத்தியது இல்லை' என மாணவி கூறியுள்ளார். இந்த மாணவிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி , 600 - க்கு 600 மதிப்பெண்கள் பெற்று வரலாற்று சாதனை !

பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். தேர்வில் பங்கேற்ற 8.03 லட்சம் பேரில் 7.55 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நந்தினி அசத்தியுள்ளார்.

சரவணக்குமார் – பானுப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி அனைத்து பாடங்களிலும் சதம் எடுத்து அபார சாதனை புரிந்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறையாகும். இதுகுறித்து பேட்டியளித்த மாணவி எஸ்.நந்தினி; எனது தந்தை கூலித் தொழிலாளி; படிப்புதான் ஒரே சொத்து என கூறி பெற்றோர் என்னை வளர்த்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கத்தால்தான் சாதனை படைக்க முடிந்தது என்றார். மேலும் தான் ஆடிட்டராக விரும்புவதாக கூறினார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை; அதற்காகவே கடினமாக படித்தேன் எனவும் மாணவி எஸ்.நந்தினி தெரிவித்துள்ளார்

هناك تعليقان (2):

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة