டி.இ.ஓ., டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் பாரபட்சம் - கல்வி அதிகாரிகள் அதிருப்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، أكتوبر 15، 2021

1 Comments

டி.இ.ஓ., டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் பாரபட்சம் - கல்வி அதிகாரிகள் அதிருப்தி!

சென்னையில் நேற்று நடந்த மாவட்ட கல்வி அலுவலர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கில் கல்வித் துறை கமிஷனர் நந்தகுமா ரின் பாரபட்ச உத்தரவால் பாதித்துள்ளதாக அதிகாரி கள் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 156 மாவட்ட கல்வி அலு வலர், துணை இயக்குனர் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நேற்று சென்னையில் பள்ளி கல்வி கமிஷனர் நந்தகுமார் முன்னிலையில் நடந்தது. முதல்முறையாக மாவட்ட கல்வி அலுவலர் களுக்கு காலிபணியிடங் களை 'ஜீரோவாக' காண் பித்து நடத்தினர். அவர்களுக்கு வழங்கிய கமிஷனரின் செயல்முறை கடிதத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்களது சொந்த வருவாய் மாவட் டத்திற்குள் டிரான்ஸ்பர் கேட்க கூடாது என தெரி வித்துள்ளார்.

கமிஷனரின் இந்த உத்த ரவு மாவட்டகல்வி அலுவ லர்கள் மத்தியில் அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட கல்வி அலுவ லர்கள் டிரான்ஸ்பரில் இவ் வளவு உத்தரவுகளை பிறப் பிக்கும் கமிஷனர் மாவட்ட முதன்மை கல்வி அலு வலர்கள் நியமனத்தில் கோட்டைவிட்டுள்ளார். என புகார் எழுந்துள்ளது. வருவாய் மாவட்டத் திற்கு உட்பட்ட நபரை முதன்மை கல்வி அலுவ லராக நியமித்தது தான் அதிருப்திக்கு காரணம். 2021 ஆக.,ல் முதன்மை கல்வி அலுவலர் டிரான்ஸ் பர் நடந்தது. தஞ்சாவூர் நூலக அதிகா ரியாக இருந்த மணிவண் ணனை அவரது வருவாய் மாவட்டமான சிவகங்கை முதன்மை கல்வி அலுவ லராக நியமித்தது அதிருப் தியை ஏற்படுத்தியுள்ளது. இவர் போன்று பல மாவட் டத்தில் சொந்த மாவட் டத்தினரை சி.இ.ஓ.,க்க ளாக நியமித்துள்ளனர்.+ முதன்மை கல்வி அலு வலர் நியமனத்திலும் விதிமுறையை கமிஷனர் நந்தகுமார் கடைபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

هناك تعليق واحد:

  1. அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நிர்வாகம் நிலையில் மாற்றம் செய்யும்போது சில நேரங்களில் பாரபட்சம் மின்றி இருக்கமுடியாது.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة