அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைக்கு கொரோனா தொற்று - 2 'டோஸ்' போட்டும் தொற்று - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، سبتمبر 05، 2021

1 Comments

அரசு பள்ளி ஆசிரியர், ஆசிரியைக்கு கொரோனா தொற்று - 2 'டோஸ்' போட்டும் தொற்று

கடலுார் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியைச் சேர்ந்த ஆசிரியர் வேப்பூரில் குடும்பத்துடன் தங்கி, கொத்தட்டை அரசு பள்ளியில் பணி புரிகிறார். இவருக்கும் அவரது மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதே வீட்டில் வாடகைக்கு தனியாக வசித்து வரும், திருநெல்வேலியைச் சேர்ந்த, வேப்பூர் அடுத்த பெரியநெசலுார் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியைக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், ஆசிரியை 2ம் தேதி கொரோனா பரிசோதனைக்கு கொடுத்து விட்டு, 2 நாட்கள் பள்ளிக்கு சென்றார். வகுப்பறைக்கு செல்லாமல் ஓய்வறையில் இருந்ததாக கல்வித் துறையினர் கூறுகின்றனர். வேப்பூர் அரசு மருத்துவக் குழுவினர் அந்த பள்ளியின் 9 ஆசிரியர்களுக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்தனர். இந்நிலையில், கொரோனா தொற்று பாதித்த ஆசிரியர் குடும்பத்தினர் மற்றும் ஆசிரியையை சிதம்பரம் ராஜ முத்தையா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு தெரிவித்து வீட்டிலிருந்தனர். இதனால் மருத்துவக் குழுவினர் வேப்பூர் தாசில்தார் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும் யாரும் வரவில்லை. பின், மாலை 4:15 மணியளவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற செல்வதாக கூறி காரில் புறப்பட்டுச் சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

.2 'டோஸ்' போட்டும் தொற்று

பெரியநெசலுார் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி 'கோவேக்சின்', கடந்த மே மாதம் 13ம் தேதி 'கோவிஷீல்டு' என 2 'டோஸ்' தடுப்பூசி போட்டுள்ளார். ஆசிரியர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளார்.

هناك تعليق واحد:

  1. தடுப்பூசி போட்டதனால் பாதிப்பு அதிகம் இருக்காது.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة