ஆன்லைன் மூலமாக இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، يوليو 28، 2021

1 Comments

ஆன்லைன் மூலமாக இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி? முழு விவரம்!!

மக்கள் இறப்பு சான்றிதழ் பெற நேரடியாக சென்று அலைய இனி தேவையில்லை ஆன்லைன் மூலமாக எளிமையாக பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

இறப்பு சான்றிதழ்:
மக்கள் பலர் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தியது முதல் அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலமாக மாறிவிட்டது. பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் என அனைத்து சான்றிதழ் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

இந்நிலையில் தற்போது இறப்பு சான்றிதழ் எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம். விண்ணப்பிக்கும் முறை:
முதலில் https://etownpanchayat.com/PublicServices/Death/ApplyDeath.aspx#! என்ற இணையதளத்தை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

அதன் முகப்பு பகுதியில் Death Details என்று இருக்கும் அதனை கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் Apply Death Registration என்று காண்பிக்கப்படும் அதை பூர்த்தி செய்ய வேண்டும்.

முதலில் மாவட்டம், நகர பஞ்சாயத்து, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.

பின்னர் இறந்தவர் குறித்த விவரங்களை உள்ளீட்டு செய்ய வேண்டும். அவரின் நிரந்தர முகவரி தகவலை (Permanent Address Information) கொடுக்க வேண்டும்.

அடுத்து எந்த இடத்தில் அந்த நபர் இறந்தார் (Place of Death) என்ற தகவலை கொடுக்க வேண்டும்.

அடுத்து அவரின் முகவரி / நோய் பற்றிய விவரங்களை (Address / Disease Details) கொடுக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பின்னர் Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

பிறகு உங்களுடைய தொலைபேசி எண்ணிற்கு ஒப்புகை எண் (Acknowledgement Number) வரும்.

அதனை கொண்டு மீண்டும் Death Details > Track Death Registration-ஐ கிளிக் செய்து உங்களுடைய Request No அல்லது தொலைபேசி எண் தகவல்களை நிரப்பி பின்னர் Generate பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த இறப்பு சான்றிதழ் மூலமாக இறந்தவரின் வாரிசுகளுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகைகள், இறந்தவரின் உடைமைகளை பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة