பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் ஆகிய பணியிடங்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார் - செய்தி வெளியீடு எண்:448 - நாள்:15.07.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الخميس، يوليو 15، 2021

1 Comments

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் ஆகிய பணியிடங்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார் - செய்தி வெளியீடு எண்:448 - நாள்:15.07.2021

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் ஆகிய பணியிடங்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

செய்தி வெளியீடு எண்:448

நாள்:15.07.2021

செய்தி வெளியீடு

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் ஆகிய பணியிடங்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 4 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2021) தலைமைச் செயலகத்தில் பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் விதமாக, 250 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்குப் பள்ளிக்கல்வித் துறை அலுவலகங்கள் மற்றும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றிட இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும், பொது நூலகத் துறையில் பணியாற்றிட 10 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நூலகர் பணியிடத்திற்கும், ஒரு பணியாளரின் வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கும், என மொத்தம் 261 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் நூலகர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித் துறை ஆணையர் திரு.க.நந்தகுமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

هناك تعليق واحد:

  1. சார்......பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் கள்ளர் சீரமைப்பு கல்வி இயக்ககம் கீழ் கருணைஅடிப்படையிலான வேலை கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக நிரப்பபடாமல் உள்ளது.....தயவு கூர்ந்து அத்துறையின் வேலைவாய்ப்பினை அளிக்க உரிய நடவடிக்கை ஏற்படுத்துமாறு.....மாண்புமிகு துறைசார்ந்த அமைச்சர் அவர்களையும்........மதிப்புமிகு...தமிழக முதலமைச்சர் அவர்களையும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.....ஐயா.....🙏🙏🙏🙏😭😭😭😭😭

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة