நாங்கள் நடந்து முடிந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 ல் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டோம். ஆசிரியர் தேர்வு வாரியமானது தேர்வு எழுதுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை 15.07.2019 க்குள் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் வெளியிடப்பட்டு இருந்தது.
நாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தேர்வு முடிவுகள் 15.07.2019 க்கு முன்பாகவே வெளியிடப்பட்டு உள்ளதால் குறிப்பிட்ட கல்வித் தகுதியினை நாங்கள் அனைவரும் Cut off date 15.07.2019 க்கு முன்னரே பெற்றுள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரிய உத்தரவின்படி சான்றிதழ் பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்ட நாட்களான 29.10.2019 - 01.11.2019 க்குள் அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ததுடன் 08.11.2019 மற்றும் 09.11.2019 அன்று நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அனைத்து சான்றிதழ்களையும் சமர்ப்பித்தோம். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியமானது முதுகலைப் படிப்பு Cutoff date 15.07.2019 க்கு பிறகு முடித்ததாகக் கூறி எங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கவில்லை.
எனவே இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரிலும் கடிதத்தின் வாயிலாகவும் பலமுறை வலியுறுத்தியும் அவர்கள் ஏற்காததால் மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் (Writ Petition) நாங்கள் அனைவரும் தகுதி உடையவர்கள் (Eligible Candidate) என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பின் அடிப்படையில் எங்களில் மூன்று நபர்கள் மட்டும் 09.02.2020 மற்றும் 10.02.2020 அன்று பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்பெற்ற கலந்தாய்வில் கலந்துகொண்டு தங்களுக்கான பள்ளியையும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இத்தீர்ப்பினை எதிர்த்து ஆசிரியர் தேர்வு வாரியம் தொடுத்த மேல்முறையீட்டு மனு (Writ Appeal) மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையிலும் ஆசிரியர் தேர்வு வாரியமானது எங்களுக்கு பணி நியமனம் வழங்காமல் 2 ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வருகிறது.
தகுதியான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றும் முறையாக சான்றிதழ் சமர்ப்பித்தும், மாணவர்களின் அறிவுக்கண்களை திறக்கும் ஆசிரியர் பணியை அர்ப்பணிப்போடு செய்த நாங்கள் இந்த அசாதாரமாண சூழ்நிலையில் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். மாண்புமிகு கல்வி அமைச்சர் ஐயா அவர்கள் எங்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து பணி நியமன ஆணை வழங்க வழிவகை செய்யுமாறு பணிந்து தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
بحث هذه المدونة الإلكترونية
الثلاثاء، يونيو 29، 2021
1
Comments
PGTRB தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரிக்கை!
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

Sir I also finished M.sc.M.phil.B.Ed and passed pgtrb in 2019 in Botany
ردحذفand participate in certificate verification
but didn't get job please give me a chance