தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الجمعة، يونيو 25، 2021

3 Comments

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்றே கடைசி நாள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மக்களுக்கு நிவாரணமாக ரேஷன் கடைகளில் ரூ.4000 இரு தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜூன் மாத தவணை ரூ.2000 மற்றும் மளிகை பொருட்கள் பெற இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மே 10 முதல் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பல தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாடு அடிப்படையில் திறக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு ரூ.4000 கொரோனா நிவாரணம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. அதன் முதல் தவணை தொகை ரூ.2000 மே மாதமே வழங்கப்பட்டது. மேலும் கொரோனா இரண்டாம் தொகை ரூ.2000 ஜூன் மாதம் வழங்கப்படும் எனவும், அத்துடன் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தை ஜூன் 3 ஆம் தேதி கலைஞர் பிறந்தநாள் அன்று முதல்வர் தொடங்கி வைத்தார். ஜூன் 15 முதல் இதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. மக்கள் கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை கடைபிடித்து ரேஷன் கடைகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் சென்று 14 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண தொகை ரூ.2000 பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.2000 மற்றும் மளிகைப் பொருட்கள் பெற இன்று கடைசி நாள் என கூறப்பட்டுள்ளது.

هناك 3 تعليقات:

  1. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நகர் பகுதியில் 12 வது வார்டு பகுதிகளில் இது வரை 11 மணி வரை 14 மளிகப் பொருள்கள் வழங்கப்படவில்லை

    ردحذف
  2. ALLOW the readers to copy the articles.

    ردحذف
  3. Hey Thanks for sharing this blog its very helpfulto implement in our work



    Regards
    Landscape company in India

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة