பிளஸ் 2 பொதுத்தேர்வு நேரத்தை குறைத்து, படித்த பள்ளியிலே பாதுகாப்போடு தேர்வு எழுத அனுமதிக்கலாம் என தேசிய ஆசிரியர் சங்கம் ஆலோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு, தேசிய ஆசிரியர் சங்க தலைவர் திரிலோகசந்திரன் அனுப்பிய கடிதம்:
இக்கட்டான காலகட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியம். அதேசமயம் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் சேர்க்கைக்கு, பிளஸ் 2 பொதுத்தேர்வு அவசியம். இதை கவனத்தில்கொண்டு, உரிய பாதுகாப்புடன் பிளஸ் 2 பொதுத்தேர்வை நடத்தலாம்.தேர்ச்சி மட்டும் போதும் என விரும்பும் மாணவர்களுக்கு, தேர்வில் இருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கலாம்.
ஃ
பிற்காலத்தில் அம்மாணவர்கள் விரும்பினால், மதிப்பெண் உயர்த்தும் தேர்வு எழுத வாய்ப்பு தரலாம்.தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு மட்டும் சுகாதாரத்துறையின் அனுமதியோடு, அதற்கான சூழல் அமையும்போது தேர்வு எழுத வைக்கலாம்.மொழிப்பாடங்களை தவிர்த்து பிற பாடங்களுக்கு தேர்வு நடத்தலாம். மொழிப்பாடங்களுக்கு பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வின் படி மதிப்பெண் அளிக்கலாம்.அல்லது பிளஸ் 1 பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அளிக்கலாம். அல்லது பிற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி மதிப்பெண்களை வழங்கலாம்.
தேர்வு நேரத்தை ஒரு மணி, 30 நிமிடங்களாக குறைந்து, ஒவ்வொரு பாடத்திற்கும், ஐந்து அல்லது, 10 மாதிரி வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, 80 சதவீத வினாக்கள் அதில் இருந்தும், 20 சதவீத வினாக்கள் பாட இறுதி வினாக்களில் இருந்தோ அல்லது பயிற்சிகளில் இருந்தோ கேட்கலாம். வினாத்தாள் நெகிழ்வுத்தன்மை உடையதாக இருக்க வேண்டும்.மாணவர்களின் எண்ணிக்கையினை கருத்தில் கொள்ளாமல் அவர்கள் பயிலும் பள்ளியே தேர்வு மையமாக செயல்படவும் அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் விரும்பும்பட்சத்தில் அவர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத அனுமதிக்கலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
بحث هذه المدونة الإلكترونية
الجمعة، يونيو 04، 2021
1
Comments
Home
11th-12th
ASSOCIATION
EXAMS
TEACHERS
மாணவர் படித்த பள்ளியிலேயே பிளஸ் 2 தேர்வு; தேசிய ஆசிரியர் சங்கம் யோசனை
மாணவர் படித்த பள்ளியிலேயே பிளஸ் 2 தேர்வு; தேசிய ஆசிரியர் சங்கம் யோசனை
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

Iuthu false
ردحذف