PF பணத்தை 10 நிமிடத்தில் எடுக்கும் எளிய வழிமுறைகள் இதோ!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، مايو 18، 2021

1 Comments

PF பணத்தை 10 நிமிடத்தில் எடுக்கும் எளிய வழிமுறைகள் இதோ!!

வாடிக்கையாளர்கள் தங்களது பிஎப் பணத்தினை வெறும் 10 நிமிடங்களில் ஆன்லைன் மூலமாக எடுத்துக் கொள்ளலாம். இதனை செய்யவதற்கு தேவையான வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

பிஎப் பணம்:
ஒருவர் தனது ஓய்வு காலத்தில் பயன்படுத்தி கொள்ள என்று தற்போதில் இருந்து சம்பளத்தில் இருந்து பிடித்து கொள்ளப்படும் பணம் தான், பிஎப். இந்த பணத்தினை நமக்கு தேவை என்ற போது நாம் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக, வீடு வாங்கும் போது, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தும் போது பணம் தேவைப்படும் போது இந்த பணத்தினை பயன்படுத்தி கொள்ளலாம். பணத்தினை எடுத்து கொள்வதற்கு முன்பாக உங்களிடம்,
உங்களது UAN எண் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உங்களது UAN எண் உங்களது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக என்று பார்த்து கொள்ளுங்கள்.
பணம் வரவு வைக்க கொடுக்கப்படும் உங்களது வங்கி கணக்கு எண் ஆதாருடன் இணைத்திருத்தல் மிகவும் அவசியம்.
இவை, இருந்தால் 10 நிமிடங்களில் உங்களது பிஎப் பணம் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். செய்ய வேண்டியவை,
முதலில், https://www.epfindia.gov.in/site_en/For_Employees.php என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
பின், இதில் சர்விசஸ் (services) என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
பின், உங்களது UAN எண் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து லாக்இன் செய்ய வேண்டும்.
அதற்கு பின்பாக, அதில் கிளைம் என்று இருக்கும். அதில் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு எண்ணை பதிவிட வேண்டும்.
வங்கி கணக்கு சரிபார்ப்பிற்கு பின்பு, விதிமுறைகள் மற்றும் கட்டளைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். பின், உங்களது பிஎப் பணத்தினை பெறுவதற்கான பார்ம் 3 படிவத்தினை தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதில் நீங்கள் பிஎப் பணத்தினை எடுப்பதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும்.
கடைசியாக, பணத்தின் அளவு, வங்கி கணக்கு பாஸ்புக் ஸ்கேன் காப்பி ஆகியவற்றை பதிவேற்ற வேண்டும்.
பின், உங்களது கணக்கு தானா என்பதனை உறுதி செய்ய ஒரு ஒடிபி பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும். அதனை பதிவிட்டு விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
உங்களது ஆவணங்கள் சரியாய் இருந்தால், 10 நிமிடங்களில் உங்களுக்கு உங்களது பிஎப் பணம் கிடைத்து விடும்.

هناك تعليق واحد:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة