பள்ளிக் கல்வி - 05.05.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 05، 2021

1 Comments

பள்ளிக் கல்வி - 05.05.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!

பள்ளிக் கல்வி - 05.05.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி) செயல்முறைகள்
பொருள்:
பள்ளிக் கல்வி அரசு/நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர்கள் (அனைத்துப் பாடங்களும்) காலிப்பணியிட விவரங்கள் கோருதல் சார்பு.
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு /நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 05.05.2021 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10.05.2021 அன்று மாலைக்குள் சி3 பிரிவு மின்னஞ்சல் முகவரிக்கும் (e3sec.tndse@nic.in) முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பமிட்ட நகலொன்றினையும் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி (Surplus Post Without Person) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்ட பணியிடங்களை எக்காரணத்தைக் கொண்டும் காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் தேவையுள்ள (Addl. Need Post) பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள் நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் (Eligible vacancy) தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

هناك تعليق واحد:

  1. இளங்கலை ஆசிரியர் முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் கல்வி அலுவலுகங்களில் பணிபுரியும்
    அமைச்சுப் பணி யாளர்களில் தகுதி யுடையவர்களை பணி நியமன ம் வழங்கப்பட்டால் அரசுக்கு செலவு குறையும். இதை அமுல் படுத்துவது எளிதாக இருக்கும்.

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة