அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை, 60 ஆக உயர்த்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழக அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது, 58 ஆக இருந்தது. நிதி பற்றாக்குறை காரணமாக, ஓய்வு வயது, கடந்தாண்டு, 59 ஆக உயர்த்தப்பட்டது. ஓய்வு பெறுவோருக்கு, ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்கள் அரசின் சார்பில் வழங்கப்படும்.
தற்போது, தமிழக அரசின் நிதி நிலைமை பற்றாக்குறையில் இருப்பதால், ஓய்வூதியம் மற்றும் பண பலன்களை வழங்கும் தொகையை, இரண்டு ஆண்டுகளுக்கு மிச்சப்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை, 59ல் இருந்து, 60 ஆக உயர்த்த, அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பு, இன்று சட்டசபையில் வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவு காரணமாக, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பண பலன்கள் வழங்க, இந்த ஆண்டுக்கு தேவையான, 10 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகும்; இந்த தொகை ஓய்வு வயது உயர்வால், ஓராண்டுக்கு பின்தான் தேவைப்படும்.
بحث هذه المدونة الإلكترونية
الخميس، فبراير 04، 2021
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)
No mind and money for settlement. So the Govt increase the age. This is not jack pot.
ردحذفவேலை வாய்ப்பு இல்லாமல் பலபேர் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் போது அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை நீட்டிப்பு என்பது சரியானது அன்று.ஓய்வூதிய பலன்களை வழங்க நிதிநிலை இல்லாததால் அரசு இந்த முடிவை எடுக்கிறது
ردحذفஅரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் இல்லை.அரசின் கையாலாகா நிலை
ردحذف