கல்வி/புத்தக கட்டணங்கள் செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை - Order Published - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 11, 2020

1 Comments

கல்வி/புத்தக கட்டணங்கள் செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை - Order Published

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
செ.வெ.எண்‌: 25 நாள்‌:11.06.2020 கல்வி கட்டணங்கள்‌ மற்றும்‌ புத்தக கட்டணங்கள்‌ செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்தும்‌ பள்ளிகள்‌ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்‌ . மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌ !!! கோயம்புத்தூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூட்டரங்கில்‌ இன்று (11.06.2020) தனியார்‌ பள்ளிகளில்‌ கல்விக்‌ கட்டணங்கள்‌ வசூல்‌ செய்வதை கண்காணிப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தலைலமையில்‌ நடைபெற்றது. இக்கூட்டத்தில்‌ மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திரு.இராமதுரைமுருகன்‌, முதன்மை கல்வி அலுவலர்‌ திருமதி.உஷா, மாவட்ட கல்வி அலுவலர்கள்‌ திருமதி.ஆர்‌.கீதா, திரு.ரமேஷ்‌, திரு.எஸ்‌.சுப்பிரமணி, திருமதி.இராஜலட்சுமி மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ பலர்‌ கலந்து கொண்டனர்‌. இக்கூட்டத்தில்‌ மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது, கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ உள்ள சில தனியார்‌ சி.பி.எஸ்‌.சி மற்றும்‌ மெட்ரிக்‌ பள்ளிகளில்‌ கல்வி கட்டணம்‌ செலுத்தவும்‌ மற்றும்‌ நோட்டு புத்தகங்களுக்கான கட்டணங்கள்‌ செலுத்த கோரியும்‌, புத்தகங்களை பெற பெற்றோர்களை அழைப்பதாகவும்‌ தெரிவித்து தொடர்ந்து பெற்றோர்களிடமிருந்து புகார்கள்‌ வந்த வண்ணம்‌ உள்ளது பேரிடர்‌ மேலாண்மை சட்டம்‌ 2005-ன்படி பொது முடக்க காலத்தில்‌ பள்ளிகள்‌ கல்விகட்டணங்கள்‌ செலுத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை அரசாணையின்படி, கோவிட்‌-19வைரஸ்‌ நோய்‌ தொற்றினை கட்டுப்படுத்த பேரிடர்‌ மேலாண்மை சட்டம்‌ 2005-ன்படி பொது முடக்கம்‌ அமலில்‌ உள்ள நிலையில்‌ அனைத்து தனியார்‌ பள்ளிகள்‌ பெற்றோர்களிடம்‌ 2020-2021 ஆம்‌ கல்வியாண்டிற்கான கல்விக்கட்டணங்கள்‌ 2019-2020ஆம்‌ கல்வியாண்டின்‌ நிலுவை கட்டணங்கள்‌ மற்றும்‌ அந்நிலுவைக்கான தாமத போன்ற கட்டணங்களை செலுத்த வற்புறுத்தவோ கட்டணங்கள்‌ கட்டாயப்படுத்துவதோ கூடாது என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும்‌ மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம்‌ மூலமாகவும்‌ அனைத்து தனியார்‌ பள்ளிகளுக்கும்‌ கல்விக்கட்டணம்‌ செலுத்துவது தொடர்பான வகை அரசாணை விவரம்‌ சுற்றறிக்கையாக ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில்‌ தொடர்ந்து கல்வி கட்டணங்கள்‌ மற்றும்‌ புத்தக கட்டணங்கள்‌ செலுத்த பெற்றோர்களை கட்டாயப்படுத்துவது, தமிழத அரசின்‌ அரசாணை மற்றும்‌ அறிவுரைகளை மீறும்‌ செயலாக கருதப்படுகிறது. அரசின்‌ அனுமதி அங்கீகாரம்‌ பெற்று செயல்படும்‌ அனைத்து கல்வி நிறுவனங்களும்‌ அரசின்‌ ஆணைகளையும்‌ அறிவுரைகளையும்‌ கட்டாயம்‌ பின்பற்றுதல்‌ வேண்டும்‌. எனவே பள்ளிகளின்‌ மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌ அதுமட்டுமல்லாமல்‌ எவ்வித காரணங்களுக்கும்‌ பெற்றோர்களாவது, மாணவர்களாவது பள்ளிகளில்‌ கூடுவது முற்றிலும்‌ தடை செய்யப்பட்டுள்ளது. சேர்க்கை, பள்ளிச்‌ சீறுடைகள்‌, புத்தகம்‌ வழங்குதல்‌ போன்றவையும்‌ மறு உத்தரவு வரும்‌ வரையில்‌ தடை செய்யப்பட்டுள்ளது. மேலும்‌ நெருக்கடியான காலகட்டங்களில்‌ அரசின்‌ அறிவுரைகள்‌ மற்றும்‌ அரசாணையை பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவது பள்ளி நிர்வாகத்தின்‌ தலையாய கடமையாகும்‌ என்பதனை உணார்ந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்தார்‌. வெளியீடு: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, கோயம்புத்தூர்‌.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews