அரசு போட்டி தேர்வு தேர்வுகளை எதிர்கொள்ள புதிய இணையதளம் தொடக்கம்: தமிழக அரசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 30, 2020

Comments:0

அரசு போட்டி தேர்வு தேர்வுகளை எதிர்கொள்ள புதிய இணையதளம் தொடக்கம்: தமிழக அரசு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் வே.விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு: அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான வழிகாட்டலும் பயிற்சியும் வழங்கும் நோக்கில் மாவட்டந்தோறும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட தலைநகரங்களில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகி தன்னார்வ பயிலும் வட்டத்தின் சேவைகளைப் பெற இயலாதர்களும், தொலைதூர கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களும், இருந்த இடத்தில் இருந்தே போட்டி தேர்வுகளுக்குத் தயார் செய்ய விரும்பும் பிற மாணவர்களும் பயன்பெறுவதற்கென தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையினால் மெய்நிகர் கற்றல் வலைதளம்( (https://tamilnaducareersrvices.tn.gov.in/) ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்விணையதளத்தில் போட்டித்தேர்வுகளுக்கென, அந்தந்த தேர்வுக்கான பாடத்திட்டத்தின் தலைப்புகள் வாரியாக மென்பாடக்குறிப்புகள் பதிவேற்றப்பட்டு உள்ளன. பாடக்குறிப்புகள் தொடர்பான வகுப்புகளும் ஒலி மற்றும் காணொளி வடிவில் பதிவேற்றப்பட்டு வருகின்றன. இது தவிர இவ்வலைதளத்தை அலைபேசி வாயிலாகப் பயன்படுத்துவதற்கென ஒரு அலைபேசி செயலியும் தயாரிக்கப்பட்டுள்ளது. இச்செயலியை https://tamilnaducareersrvices.tn.gov.in தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளை அலைபேசியிலேயே பதிவுதாரர்கள் படிக்க இயலும். எனவே அரசுத்துறையில் வேலை பெற விரும்பும் இளைஞர்கள் அனைவரும் இவ்விணையதளத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து இவ்வலைதளத்தின் சேவைகளை இலவசமாகப் பெற்று பயனடையலாம்
போட்டித் தேர்வுகளுக்கான பாடங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில், தன்னார்வ பயிலும் வட்டங்கள் செயல்படுகின்றன. இவற்றில், டி.என்.பி.எஸ்.சி., உட்பட, பல்வேறு போட்டித் தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இலவசம்
இப்பயிற்சி வகுப்புகளில், தேர்வுகளுக்கு தேவையான பாடக்குறிப்பு கள், புத்தகங்கள், நாளிதழ்கள் ஆகியவை வழங்கப்படுவதுடன், மாதிரி தேர்வுகள், மாதிரி நேர்காணல்கள், இலவசமாக நடத்தப்படுகின்றன.இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களில், இதுவரை, 3,888 மாணவர்கள், பல்வேறு அரசுப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில், 42 பேர் மாற்றுத் திறனாளிகள். எனவே, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க, விருப்பம் உள்ள மாணவர்கள்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுகவும்.
தொலைதுார கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள், இருந்த இடத்தில் இருந்தபடி, போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்ய விரும்புவோர், பயன் பெற, தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், tamilnaducareerservices.tn.gov.in என்ற இணைய தளம் செயல்பாட்டில் உள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews