'நீட்' தேர்வு எழுத விரும்புேவார் 'ஆன்லைன்' பதிவு துவங்கியது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 03, 2019

Comments:0

'நீட்' தேர்வு எழுத விரும்புேவார் 'ஆன்லைன்' பதிவு துவங்கியது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அடுத்த ஆண்டு, மே, 3ல் நடக்கவுள்ள மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, 'ஆன்லைன்' பதிவு துவங்கியுள்ளது; வரும், 31 வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்.,மற்றும் பி.டி.எஸ்., போன்ற, மருத்துவ படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வான, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே, அரசு, தனியார் கல்லுாரிகள் மற்றும் தனியார் பல்கலைகளில், மருத்துவ படிப்புகளில் சேர முடியும்.
தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்த கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ்., சேர்வதற்கான, 'நீட்' தேர்வு, நேற்று அறிவிக்கப்பட்டது. வரும், 2020 மே, 3ம் தேதி, பிற்பகல், 2:00 மணிக்கு தேர்வு துவங்கி, மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கான அவகாசம், நேற்று மாலை, 4:00 மணிக்கு துவங்கியது; வரும், 31 வரை பதிவு செய்யலாம். இந்த தேர்வு, நாடு முழுவதும், 11 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம் மற்றும் குஜராத்தி ஆகிய மொழிகளில், வினாத்தாள் இடம்பெறும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வு கட்டணமாக, பொது பிரிவினருக்கு, 1,500 ரூபாய்; பொருளாதாரத்தில் நலிவடைந்த பொது பிரிவினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், 1,400; பட்டியலினம், பழங்குடியினம், மாற்று திறனாளி மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு, 800 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு கட்டணத்தை, ஜனவரி, 1ம் தேதி வரை, ஆன்லைன் வழியில் செலுத்தலாம். 'ஹால் டிக்கெட்' வினியோகம், மார்ச், 27ம் தேதி நடக்கும்; தேர்வு முடிவுகள், ஜூன், 4ம் தேதி வெளியிடப்படும் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. கூடுதல் தகவல்களை, nta.ac.in/medicalexam என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
CLICK HERE TO DOWNLOAD FULL DETAILS PDF
CLICK HERE NOTCE PDF
CLICK HERE FOR APPLY
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews