Breaking

Saturday, May 11, 2019

பிளஸ் 2வில் மொழி பாடம் குறைப்பா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வில், மொழி பாடங்கள் குறைக்கப்பட உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், தமிழக பாடத் திட்டத்தில், தமிழ் மற்றும் பிற மொழி உள்ளிட்ட மொழித்தாள், ஆங்கிலம், நான்கு முக்கிய பாடங்கள் என, ஆறு தாள்களுக்கு, 600 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது.இந்த ஆறு தாள்களை, ஐந்து தாள்களாக மாற்றி, மொத்தம், 500 மதிப்பெண்களுக்கு மட்டும் தேர்வு நடத்தலாம் என, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக, நேற்று தகவல்கள் வெளியாகின.
மொழி பாடங்களில், மாநில மொழி அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில், ஏதாவது ஒன்று மட்டும் படித்தால் போதும் என, அரசு அறிவிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.இது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, 'அது போன்ற திட்டம் எதையும், பள்ளி கல்வித்துறை அறிவிக்கவில்லை' என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog