Breaking

Saturday, May 11, 2019

பல ஆண்டுகளாக இணைப்புக் கட்டணம் செலுத்தாத 122 கல்வியியல் கல்லூரிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டிய இணைப்புக் கட்டணத்தை 122 கல்வியியல் கல்லூரிகள் பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்து வந்திருப்பது தெரியவந்திருக்கிறது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் அதிகமான பி.எட். (கல்வியியல்) கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகள் பல்கலைக்கழக இணைப்புக் கட்டணமாக மூன்று கல்வியாண்டுகளுக்கு ரூ. 1 லட்சம் வீதம் பல்கலைக்கழகத்துக்கு செலுத்த வேண்டும்.
ஆனால், பல கல்லூரிகள் இந்தக் கட்டணத்தைச் செலுத்தாமலே இருந்து வந்துள்ளன. இதுதொடர்பாக பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டபோது, 122 கல்வியியல் கல்லூரிகள் பல ஆண்டுகளாக இணைப்புக் கட்டணத்தைச் செலுத்தாமல், பல்கலைக்கழகத்தின் வசதிகளைப் பெற்று வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்லூரிகள் அபராதத் தொகையுடன் சேர்த்து ரூ. 1 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை இணைப்புக் கட்டணம் நிலுவை வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 122 கல்லூரிகளின் பட்டியலை செலுத்த வேண்டிய கட்டணத்துடன் சேர்த்து பல்கலைக்கழக இணையதளத்தில் கடந்த 6 ஆம் தேதி வெளியிட்ட பல்கலைக்கழகப் பதிவாளர், வெள்ளிக்கிழமைக்குள் இந்த நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும். இல்லையெனில், பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து உள்ளிட்ட வசதிகள் ரத்து செய்யப்படும் என எச்சரித்திருந்தார்.
ஆனால், கால அவகாசம் முடிந்த பிறகும் பல கல்லூரிகள் நிலுவை இணைப்புக் கட்டணத்தைச் செலுத்தவில்லை என பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்தக் கல்லூரிகளில் 2019-20 கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்படுமா அல்லது பல்கலைக்கழகத்தின் எச்சரிக்கையையும் மீறி சேர்க்கை நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்கள் கிடைக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் என். ரவீந்தரநாத் தாகூர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog