சர்வதேச ஆசிரியர் விருது ஸ்வரூப் சம்பத்துக்கு பெருமை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 22, 2019

சர்வதேச ஆசிரியர் விருது ஸ்வரூப் சம்பத்துக்கு பெருமை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
சர்வதேச ஆசிரியர் விருதுக்கான தேர்வில், ௧௦ பேர் அடங்கிய இறுதிப் பட்டி யலில், நம் நாட்டைச் சேர்ந்த, முன்னாள் நடிகையும், ஆசிரியையுமான, ஸ்வரூப் சம்பத் இடம் பெற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடான, பிரிட்டனைச் சேர்ந்த, &'வர்க்கி பவுண்டேஷன்&' என்ற அமைப்பு, ஆண்டுதோறும், சர்வதேச அளவில், சிறந்த ஆசிரியருக்கான விருதை வழங்கி வருகிறது. இந்த விருது, ௭ கோடி ரூபாய் பரிசுத் தொகை உடையது.இந்த ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் விருதுக்கு, ௧௭௯ நாடுகளில்இருந்து, ௧௦ ஆயிரத்துக்கும் அதிகமானோர் பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில், இந்தியா வின் ஸ்வரூப் சம்பத், 60, உட்பட, 10 பேர் மட்டும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர், சர்வதேச ஆசிரியர் விருதுக்கு, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், அடுத்த மாதம் தேர்வு செய்யப்படுவார். ஸ்வரூப் சம்பத், ௧௯௭௯ல், &'மிஸ் இந்தியா&' பட்டம் வென்றவர்; உலக அழகி போட்டியில் பங்கேற்றவர். நரம் கரம், சத்யா, கரீஷ்மா உட்பட பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். &'ஷிங்கார்&' சாந்துப் பொட்டு விளம்பரம் மூலம், மிகவும் பிரபலமானார். பரஷ் ராவல் என்பவரை திருமணம் செய்தார். திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பின், கல்விப் பணியில் ஆர்வம் காட்டினார். மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.இது பற்றி ஸ்வரூப் கூறுகையில், &'&'உலக அளவில் கல்வி ஒரு சவாலாகவே உள்ளது. கல்வியை மேம்படுத்த எடுக்கப்படும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டும். பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு என் வாழ்த்து கள்,&'&' என்றார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews