5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 23, 2019

5, 8-ஆம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது.
அதில் மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டே பொதுத் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, ஈரோட்டில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என தெரிவித்தார். ஆனாலும், பொதுத்தேர்வு பற்றிய குழப்பம் நீடித்தது. இந்நிலையில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போதுமே கிடையாது என அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது. பொதுத்தேர்வு உள்ளது என தவறான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மாநில அரசு விரும்பினால் நடத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது. மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டு மட்டுமல்ல, எப்போதுமே கிடையாது - அமைச்சர் செங்கோட்டையன் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும், பொதுத்தேர்வு உள்ளது என வெளியாகும் தகவல்கள் தவறானவை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளதாகவும், 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
5,8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது; பொதுத்தேர்வு உள்ளது என தவறான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன மாநில அரசு விரும்பினால் பொதுத்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு கூறியுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews